நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பிற மாநில மக்களுக்கு எதிராக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஈரோடு:

காவல்துறை பாதுகாப்புடன் இருந்துகொண்டு பிற மாநில மக்களுக்கு எதிராக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண வெற்றி விழா மற்றும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு பரப்புரை இயக்க துவக்க விழா நடைபெற்றது. 

புதிய ரயில் நிலையம் தொடங்கி, பனகல் சாலை வழியாக நடைபெற்ற பேரணியில், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், மேளதாளங்கள் முழங்க கே.எஸ்.அழகிரிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற, காவிரி டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ஈரோட்டில் காங்கிரஸின் வெற்றி எழுதப்பட்டு விட்டதாகக் கூறினார். 

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள்தான் காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்வதால் தான் திருப்பூரில் நூல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்று தெரிவித்தார். 

வட இந்தியர்கள் இல்லையென்றால் திருப்பூரில் தொழிற்சாலைகள் இயங்காது என்றும், அவர்களை தாக்கினால் வடமாநிலங்களில் பணியாற்றும் தமிழர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார்.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset