செய்திகள் சிந்தனைகள்
ஆண் வெறும் வாரிசு! பெண் பெரும் பரிசு - வெள்ளிச் சிந்தனை
01. மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மா தவம் செய்திட வேண்டும் அம்மா!
02. சகிப்புத் தன்மைக்கு
எடுத்துக்காட்டாக விளங்குபவள் பெண்!
03. எந்த வீட்டில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ,
அந்த வீட்டில் இறைவானவர்கள் தங்குவார்கள்.
04. வாழ்க்கை எனும் மிகப்பெரிய கடலைக் கடக்க,
பெண் என்ற கப்பல் கட்டாயம் தேவை.
05. ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது
ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்குச் சமம்.
06. இறையன்பு வளரும் ஒரே இடம்
பெண்ணின் மடி மட்டுமே!
07. பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறார்களோ, அதைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் இருக்கும்.
08. ஒரு ஆண் முதுமையில இழக்கக் கூடாத
ஆகப்பெரிய சொத்து மனைவிதான்.
09. சூரியன் இல்லாம இந்த பூலோகம் சுழலாது.ஆனா...
பொம்பளைங்க இல்லாம இந்த உலகமே இயங்காது!
10. பெண் குழந்தைங்க இல்லாதவங்க அன்பு, பாசம் குறித்து அறவே அறியமுடியாது.
11. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வெறும் வார்த்தை அல்ல, நூறு சதவீத உண்மை!
12. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று ஒரு சொலவடை உண்டு. இதுக்கு நன்மையும் தீமையும் நடப்பது பெண்ணாலே என்று அர்த்தம் சொல்வாங்க.
ஆனா...உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? நல்லது ஆவதும் பெண்ணாலே; தீயது அழிவதும் பெண்ணாலே என்பதுதான் உண்மையான அர்த்தம்.
13. அன்பால் அரவணைக்குற அன்னை,
தமயனுக்காக தவிக்குற தங்கை,
மனதால மயக்குற மனைவி,
கண்களால் கவருகிற காதலி,
குசும்பு பண்ணுகிற குட்டி மக
என்று பல்வேறு வண்ணம் காட்டுபவள் ஒரு பெண்.
14. ஒரு விசயத்தை சொல்லவேண்டும் என்றால்,
அதை ஓர் ஆணிடம் சொல்லுங்கள். ஆனால்...
அதே விசயத்தை செய்து முடிக்கவேண்டும் என்றால், அதை ஒரு பெண்ணிடம் சொல்லுங்கள்!
15. பெத்தவங்க விரும்புவது என்னமோ ஆம்புளப் புள்ளைங்களத்தான்! ஆனா...பெத்தவங்கள கடைசி வரை காப்பாத்துறது, அவுங்க மேல பிரியமா இருக்குறது பொம்பளை புள்ளைங்கதான்.
16. புருசனோட வருமானத்துக்கு ஏற்ப தன்னோட தேவைகளை சுருக்கிக் கொள்கிற ஒரு பெண், மனைவி அல்ல. அவள் ஒரு இறை'வரம்!'
17. யோகக் காரங்களுக்குத்தான் அதாவது 'பறக்கத்' என்ற இறைவனோட நற்பேறு பெற்றவர்களுக்குத்தான் மொத குழந்தை பொம்பள புள்ளையா பொறக்கும்.
18. இருட்டோட போராடுனாத்தான் புழு, வண்ணத்துப் பூச்சியா மாறும்; மண்ணோடு போராடினாத்தான்
ஒரு விதை மரமாக முடியும்; அதுபோல, வலியோடு போராடினாத்தான் ஒரு பெண் தாயாக முடியும்.
19. குழந்தைப்பேறு சமயத்தில் பொம்பளைங்க பட வேண்டிய வேதனைகள...ஆம்புளைங்க பட வேண்டியிருந்தா, அவுங்கள்ல யாரும் ஒரு தடவைக்கு மேல குழந்தை பெற சம்மதிக்கவே மாட்டாங்க!
20. ஆம்புளப் புள்ளை என்பது, வெறும் 'வாரிசு' மட்டும்தான்! ஆனா...பொம்புளைப் புள்ளை என்பது, இறைவன் தந்த மிகப்பெரிய 'பரிசு!'
21. நூறு பேரு சேர்ந்து ஒரு பெரிய முகாம் அமைக்கலாம். ஆனா...ஒரு பெண்ணாலத்தான் மிகச்சிறந்த இல்லறத்தை அமைக்கமுடியும் என்பது எதார்த்த உண்மை!
22. நாடாளும் வித்தையை தந்தையிடமிருந்து குழந்தைங்க கத்துக்குவாங்க. ஆனா, வீடாளும் வித்தையை குழந்தைங்க தாயிடமிருந்துதான் கத்துக்கமுடியும்.
23. ஒரு மஹல்லாவில பெண்கள் விழிப்படைஞ்சுட்டா குடும்பம் முன்னேறும்; கிராமங்கள் முன்னேறும்; ஏன், இந்த தேசமே முன்னேறும்.
24. பெண்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானவங்கதான். எனவே அவுங்களை நாம வழிநடத்துறதும் சிறப்பாக இருக்கவேண்டும்.
25. பெண்குழந்தை மூலம் சோதிக்கப்பட்ட போதும், அந்த குழந்தைக்கு நல்லது செய்வோருக்கு அந்தக் குழந்தை நாளை மறுமையில் நரகத்திலிருந்து பாதுகாக்கும் திரையாக இருக்கும் என்பது நபிகாளார் வாக்கு. (ஸஹீஹ் முஸ்லிம் 5125)
- கே. ரஹ்மதுல்லாஹ்மஹ்ளரீ
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am