நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தவறாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய பிரஜைக்கு வெ. 225,000 இழப்பீடு

சிரம்பான்:

தவறாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய பிரஜைக்கு 225,000 வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிரம்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அ. ஆனந்தகோபி 2020 மார்ச் 7ஆம் தேதி மலேசியாவுக்கு வந்தார்.

மார்ச் 23ஆம் தேதி அவர் இந்தியாவுக்கு திரும்பி சென்றிருக்க வேண்டும். ஆனால் கோவிட்-19 தொற்று தாக்கத்தால் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. இதனால் அவர் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி ரந்தாவ் ஆலயத்தில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அதே வேளையில் அக்டோபர் 22ஆம் தேதி போர்ட்டிக்சன் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். நாட்டில் கால அவகாசத்தை தாண்டி அவர் தங்கியிருந்தார் என் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றத்தை மறுத்த அவர் மலாக்கா சுங்க ஊடாங் சிறையில் நவம்பர் 10ஆம் தேதி தடுத்து வைக்கப்பட்டார்.

நாட்டின் எல்லைகள் திறந்த பின் அவர் விடுவிக்கப்பட்டார். தமக்கு நிகழ்ந்த அநீதிதியை எதிர்த்து அவர் வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

உள்துறை அமைச்சு, போலீஸ்படைத் தலைவர், நெகிரி செம்பிலான் போலீஸ்படைத் தலைவர், விசாரனை போலீஸ் அதிகாரி ஆகியோர் மீது அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை சிரம்பான் உயர் நீதிமன்ற நீதிபதி அஸிசூல் அஸ்மி அட்னான் வாசித்தார்.

தமக்கு எதிரான் நடந்த அநீதிகளை ஆனந்தகோபி ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளார்.

ஆகவே தவறாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆனந்த கோபிக்கு 225,000 வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டு என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset