நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம் எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது: அந்தோனி லோக் 

கோலாலம்பூர்:

காணாமல் போன எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர அரசாங்கம் விரும்புவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

யுனைட்டட் கிங்டங்கத்திற்கு சொந்தமான ஓஷன் இன்பினிட்டி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கடற்பரப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் காணாமல் போன விமானத்தின் பாகங்களைக் கண்டுபிடிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அந்தோனி லோக் கூறினார்.

இந்தியப் பெருங்கடலின் தெற்கில் 15,000 சதுர கிலோமீட்டர்கள் (கிமீ) என மதிப்பிடப்பட்ட புதிய இடத்தில் MH370 விமானத்தின் சிதைவுகளைக் கண்டறிவது குறித்து கடந்த ஜூன் மாதம் முதல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். .

எம்எச் 370 விமானம் குறித்த புதிய தகவல்களோ அல்லது ஆதாரங்களோ வலுவானதாக இருந்தால் அதைத் தேடுவதை புறக்கணிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

"ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட புதிய தேடல் பகுதியின் இருப்பிடம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் ஆலோசிக்கப்பட்ட நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் செய்யப்பட்ட சமீபத்திய தகவல் மற்றும் தரவு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset