நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில் துறை நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் 2,011 பேர் நாட்டிற்குள் வந்துள்ளனர்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

தொழில் துறை நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் 2,011 பேர் நாட்டிற்குள் வந்துள்ளனர்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

வெளிநாட்டில் உள்ள உள்ளூர் திறமையாளர்களை மலேசியாவுக்கு திரும்ப ஈர்ப்பதற்காக அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேலன்ட் கோர்ப், மைஹார்ட் தளத்தின் கீழ் நிபுணர்கள் நாடு திரும்பும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 11,124 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதில் 2011 பேர் நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டனர்.

இத்திட்டத்தின் கீழ் நாடு திரும்புபவர்களுக்கு 15 சதவீத வருமான வரி விலக்கு, தனிப்பட்ட பொருட்களுக்கான வரி விலக்கு, 100,000 ரிங்கிட் வரை வாகன கலால் வரியிலிருந்து விலக்கு, வாழ்க்கைத் துணை, குழந்தைகளுக்கான நிரந்தர வசிப்பிச அந்தஸ்து பெறுவதற்கான வசதிகள் போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மலேசியர்களின் இடம்பெயர்வு புள்ளிவிவரங்கள், மலேசியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க உள்ளூர் திறமைகளை மீண்டும் ஈர்ப்பதே அமைச்சின் இலாக்காக உள்ளது.

ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுய் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset