நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபீசி டோல் சாவடியின் தடுப்பு சுவரை கார் மோதியது: இருவர் மரணம்

கோலாலம்பூர்:

சுங்கைபீசி டோல் சாவடியின் தடுப்பு சுவரை கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருவர் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் சுங்கைபீசி டோல் சாவடியில் சிரம்பானை நோக்கி செல்லும் சாலையில் நிகழ்ந்தது.

இவ்விபத்து குறித்து அதிகாலை 3.42 மணிக்கு  தீயணைப்புப் படையினருக்கு அழைப்பு வந்தது.

உடனே ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

65 வயதுடைய இருவர் பயணித்த ஹோண்டா சிஆர்வி வாகனம் தடுப்பு சுவரை மோதி விபத்துக்குள்ளாகி கிடந்தது.

இந்த விபத்தில் பலியான இருவர் வாகனத்தின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டனர். 

தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலை வெற்றிகரமாக மீட்டனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் இறந்துவிட்டதாக மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி இயக்குனரான அஹ்மத் முக்லிஸ் முக்தார்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset