செய்திகள் மலேசியா
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தங்கத்தின் விலை சீராக நிலை நிறுத்தப்பட வேண்டும்: டத்தோ அப்துல் ரசூல்
கோலாலம்பூர்:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின் தங்கத்தின் விலை சீராக நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இது தான் உலகளாவிய தங்க வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறினார்.
தங்கத்தின் விலை உலகளாவிய நிலையில் தினந்தோறும் பலமடங்கு உயர்ந்து வருகிறது.
இதற்கு உலக அளவில் நடக்கும் போர்கள் முக்கிய காரணமாக உள்ளது.
அதே வேளையில் நிலைத் தன்மை இல்லாத அரசியல் சூழ்நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவையும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலும் இதற்கு ஒரு அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் டோனல்டு டிராம்பும் கமலா ஹரிசும் போட்டியிடுகின்றனர்.
இதில் யார் வெற்றி பெற்றாலும் உலகளவில் நடக்கும் யுத்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதன் மூலம் தங்கத்தின் விலை சீராகும். குறிப்பாக தங்க வணிகமும் பரவலாக அதிகரிக்கும்.
ஆகவே அமெரிக்காவில் யார் தலைமையேற்றாலும் இந்த விவகாரத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இது தான் உலக அளவில் உள்ள தங்க வணிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறினார்.
இதனிடையே தங்கத்தின் விலை அதிகரித்தால் வணிகர்களுக்கு நல்லது என்று கூறுகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை.
தங்கத்தின் விலை உயர்ந்தால் வாங்கும் சக்தி குறைந்து விடும். வாங்கும் சக்தி இல்லை என்றால் வணிகம் எப்படி நடக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆக தங்கத்தின் விலை உயர்வு வணிகர்களுக்கு பாதிப்பு தான் என்று அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2024, 5:23 pm
தேசிய முன்னணி எந்த அரசியல் கட்சியுடனும் ஒத்துழைப்பதை நிறுத்தாது: அஹமத் ஜாஹிட் ஹமிடி
November 5, 2024, 4:13 pm
இன்று தொடங்கும் பருவமழை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
November 5, 2024, 3:50 pm
நவம்பர் 15-ஆம் தேதி சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்: அமிருடின் ஷாரி
November 5, 2024, 3:47 pm
பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுபடுத்த மலேசியா உறுதி பூண்டுள்ளது: பிரதமர் அன்வார்
November 5, 2024, 1:03 pm
எம் எச் 370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடர அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது: அந்தோனி லோக்
November 5, 2024, 12:50 pm
முதன்முறையாக DATING சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி: நடுக்காட்டில் தவிக்கவிட்டு சென்ற காதலன்
November 5, 2024, 11:49 am
தொழில் துறை நிபுணர்கள் நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் 2,011 பேர் நாட்டிற்குள் வந்துள்ளனர்: ஸ்டீவன் சிம்
November 5, 2024, 11:47 am