நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திலிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன; ஆயிரம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு, ஓட்டுனர் உரிமம் குறித்த தகவல்கள் கசிவு

அட்லாண்டா: 

சொகுசு கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகில் முன்னணியில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பொதுவெளியில் கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சொகுசு கார், பேருந்துகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

இந் நிலையில் அட்லாண்டாவில் செயல்படும் தலைமையகத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந் நிறுவனம் கூறியுள்ளது. சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுனர் உரிமம் எண், கிரெடிட் கார்டு ஆகிய விவரங்கள் திருடப்பட்டதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. 

Mercedes-Benz USA Headquarters | Projects | Gensler

வாடிக்கையாளர்கள் தகவல்கள் பராமரிக்கும் நிறுவனம், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஜனவரி முதல் 2017 ஜூன் வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே கசிந்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset