செய்திகள் உலகம்
85 நாடுகளில் மோசமான டெல்டா வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது: உலக சுகாதார அமைப்பு கவலை
ஜெனீவா:
85 நாடுகளில் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மையம் தரப்பில் கூறும்போது, “டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 85 நாடுகளில் டெல்டா கரோனா வைரஸ் படு வேகமாகப் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதில் டெல்டா வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே நிலை தொடர்ந்தால் உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், டெல்டா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ்கள், கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப்பிடும்போது எளிதாக அடையாளப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து, உருமாறிய கொரோனா வைரஸ்களுக்குப் பெயரையும் வெளியிட்டது.
மேலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு லாம்ப்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
