செய்திகள் சிந்தனைகள்
பேராக்கில் கவுன்சிலர்கள் நியமனம்: மஇகா புறக்கணிப்பு? ஜசெக இந்தியர்களை ஏமாற்றுமா?
ஈப்போ:
பேராக்கில் சுமார் 360 கவுன்சிலர்கள் கூடிய விரைவில் நியமனம் செய்யப்படவுள்ள நிலையில் மஇகாவுக்கு இதில் அதிகபட்சமாக 15 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.
15 மாவட்டங்களை கொண்ட பேராவில் ஒரு மாவட்டத்திற்கு 24 கவுன்சிலர்கள் என்ற எண்ணிக்கையில் 360 பேர் என்று கணக்கிடப்படுகிறது.
மஇகா மட்டுமின்றி அம்னோ, மசீச கட்சிக்கும் இதே கதிதான் என்றும் கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் ம இகாவுக்கு 40க்கும் மேற்பட்ட இடங்களும், மசீசவுக்கு 60க்கும் மேற்பட்ட இடங்களும், அம்னோ சுமார் 150 கவுன்சிலர்களையும் பகிர்ந்து கொள்ளும்.
ஆனால், இந்த முறை நிலைமை அப்படியில்லை. பக்கத்தான் ஆட்சி என்பதால் அதில் இடம் பெற்றுள்ள அமானா, பிகேஆர், ஜசெக, மூடா ஆகிய கட்சியினருக்கும் பேராக்கின் கவுன்சிலர் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியுள்ளது.
அந்த வகையில் கடந்த காலங்களில் மூன்றிலிருந்து நான்கு கட்சிகள் மட்டுமே பகிர்ந்து கொண்ட கவுன்சிலர் பதவிகள் இம்முறை 8 கட்சிகள் பங்கு போட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் பிரதான ஆளும் கட்சியான பிகேஆர் பக்கத்தான் கூட்டணியில் இருக்கும் அமானா, ஜசெகவுக்கு அதிகமான இடங்கள் போய் சேர வேண்டியிருப்பதால் அம்னோவுக்கு 70, மசீச 25, ம இகாவுக்கு 15 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 110 இடங்கள் போக மீதமுள்ள 200க்கும் மேற்பட்ட இடங்கள் தொடக்கக்கால பக்கத்தான் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது
மற்றோரு தகவலாக ம இகா பேரா கவுன்சிலர் பதவியை புறக்கணிக்கக்கூடும் என்று கட்சி வட்டாரம் ஒன்று கூறுகிறது.
ஜசெகவை பொறுத்தவரை இந்தக் கட்சியில் இந்திய உறுப்பினர்கள், சில இந்திய தலைவர்கள் அதிகமான இந்திய ஆதரவாளர்கள் இருக்கும் பட்சத்தில் கவுன்சிலர்கள் விவகாரத்தில் இந்தியர்களை நியமிப்பதில் ஜசெக அலட்சியப் போக்கையே காட்டி வந்துள்ளது என்பது குறிப்பாக 2018 தேர்தல் வெற்றியின் 22 மாதக்கால ஆட்சியின் போது ஏற்பட்ட கசப்பான உண்மையாகும்.
மிகமிக குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கே ஜசெஜ அந்த வாய்ப்பை கொடுத்தது.
அந்த கால கட்டத்தில் இது பேசுபொருளானது. இது குறித்து ஜசெக இந்திய மூத்த தலைவர்களும் கவுன்சிலர்கள் நியமன விவகாரத்தில் மேலிடத்தில் பேசாமல் ஊமைகளாக இருந்து கண்டனத்திற்கும் ஆளானார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கொடி பிடிக்க மட்டும்தான் ஜசெகவில் இந்தியர்கள் தேவையா என்ற கோஷங்கள் எல்லாம் அப்போது எழுந்தன.
அந்த வகையில் இந்த முறையும் கவுன்சிலர்கள் விவகாரத்தில் ஜசெக கட்சி, இந்தியர்களை நியமிப்பதில் அலட்சியம் காட்டுமா என்ற எதிர்ப்பார்ப்புகள் கேள்வியை பேராக்கில் ஒலிக்க தொடங்கி விட்டன
- எம் ஏ அலி
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am