செய்திகள் சிந்தனைகள்
சொல்லப்படும் வரலாறுகளில் பாதிக்கும் மேல் உண்மையில்லை: நமது வரலாறுகள் சொல்லித் தரப்படுவதுமில்லை - வெள்ளிச் சிந்தனை
வரலாறுகள் மீள்பதிவு செய்யப்படும் காலமிது. ஆனால் அவை திரித்தும் மறித்தும் சொல்லப்படுகின்றன. சொல்லப்படும் வரலாறுகளில் பாதிக்கும் மேல் உண்மையில்லை.
பொல்லாத நெப்போலியனுடைய வரலாறு நமக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் சரணடைந்த பிறகும் 3000 போர்க் கைதிகளை துரோகமாக அவன் கொன்ற கதையை யாரும் கூறுவதில்லை.
ஜெரூசலேமுக்குச் சென்று, "யூதர்கள் இந்த நாட்டை விட்டு புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என்று அவன் கூறியதை யாரும் கூறுவதில்லை.
அங்குள்ள முக்கிய நபர்களை தூக்கிலிட்டு, நகர வாயில்களில் அவர்களின் தலைகளை கட்டித் தொங்கவிட்டதை யாரும் குறிப்பிடுவதில்லை.
எகிப்தின் அல்அஸ்ஹர் பள்ளிவாசலுக்குள் நுழைந்து முதியோர்களையும் பார்வையற்ற மாணவர்களையும் அவன் கொன்றதை யாரும் கூறுவதில்லை.
ளிரார் இப்னுல் அஸ்வர் (ரலி). யர்மூக் போரில் நிகரற்ற வீரத்தை வெளிப்படுத்திய வீரர். ’’வெற்று மார்புடன் அலையும் ஷைத்தான்’’ என்று ரோமர்கள் இவரை அச்சத்துடன் அழைத்தனர். ஏனெனில், போருக்கு முன்பே 20 தளபதிகளை ஒற்றை நபராக ஒன்றன்பின் ஒன்றாக கொன்றார். எதிரிகளின் மன உறுதியை நசுக்கினார். இந்த வரலாற்றை யாரும் நமக்குக் கூறுவதில்லை.
இத்தகைய சாதனைகளை அவர்களின் திரைப்படங்களில் கூட உருவாக்க முடியாது.
ஒழுக்கம் கெட்ட, துரோகியான கிளியோபட்ராவின் வரலாற்றை நமக்குக் கற்பிக்கிறார்கள்.
ஆனால் அன்னை ஆயிஷா (ரலி), அஸ்மா (ரலி) போன்ற வீரமங்கைகளின் வரலாற்றையோ உம்மு அம்மாரா (ரலி) அவர்களின் ஒற்றைக் கை போராட்டத்தையோ யாரும் கற்றுத் தருவதில்லை.
பிளேட்டோ, சாக்ரடீஸின் வரலாற்றை கற்பிக்கிறார்கள். அதில் பாதிக்குமேல் உண்மையில்லை. ஆனால் சத்தியத்தைத் தேடி கால்நடைப் பயணம் சென்ற ஸல்மானுல் ஃபாரிசி (ரலி)-ன் வரலாற்றை கற்றுத் தருவதில்லை.
இஸ்லாமிய அடையாளங்களை அழித்து, முன்னோர்களின் வரலாறுகள் குறித்து எதுவும் தெரியாத முஸ்லிம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.
மேற்கத்திய நாடுகளிலும் அவர்களின் வரலாற்றிலும் உண்மையான ஹீரோக்கள் இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பனை கதாபாத்திரங்களை கற்பிக்கிறார்கள்.
பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் குறித்த திரைப்படங்களைத் தயாரித்து, பூமியின் பாதுகாவலர்களாக அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாவலர்களாக அவர்களை சித்தரிக்கின்றார்கள்.
வரலாற்றின் மிகப்பெரிய இராணுவத் தளபதி காலித் பின் வலீத் (ரலி). முஃதா போரில் எதிரிகளின் கழுத்துக்களை சீவியே அவரது கையில் எட்டு வாள்கள் முறிந்தன.
"கஃகா (ரலி) என்ற ஒற்றை வீரர், இராணுவத்தின் முன்னணியில் இருப்பதே வெற்றிக்கு உத்தரவாதம்”, "கஃகா (ரலி) இருக்கும் படையை யாராலும் தோற்கடிக்க முடியாது” என்றார் அபூபக்கர் (ரலி).
இத்தகைய வீரர்கள் குறித்து நமக்கு ஏன் யாரும் சொல்லித் தருவதில்லை?
சிலுவைப் போர் வீரர்களை எதிர்த்து போராடி வெற்றிகண்ட 83 வயது யூசுஃப் இப்னு தாஷிஃபீன்..
ஆஃப்ரிக்காவையும் அண்டலூசியாவையும் கைப்பற்றிய தளபதி மூஸா இப்னு நசீர்..
ஒருவருடம் ஹஜ் செய்து மறுவருடம் போரை வழிநடத்திய கலீஃபா ஹாரூன் ரஷீத்…
அட்லாண்டிக் பெருங்கடல் வரை வெற்றி கண்ட தளபதி உக்பத் இப்னு நாஃபிவு (ரலி)…
இத்தகையோரின் வரலாறுகளை நமது குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
ஏனெனில், மேற்கத்தியர்களைப் போன்று வரலாறு இல்லாத சமூகமல்ல நாம்.
நமது வரலாற்றை நசுக்கி, நம்மை அடிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை கத்தியின்றி இரத்தமின்றி அவர்கள் செய்கிறார்கள்.
நமது வரலாறுகளை கற்போம்! கற்பிப்போம்!
ஏனெனில், வரலாறு இல்லாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
January 10, 2026, 8:09 am
மருங்கிப் போகத் தயாராகிறதா இந்தியாவின் மருத்துவத் துறை..?
January 9, 2026, 8:26 am
உங்கள் நேர்மையை, உண்மையான பண்புகளை அறியாதவர்களை இறைவனிடம் விட்டுவிடுங்கள் - வெள்ளிச் சிந்தனை
January 4, 2026, 9:02 am
அமெரிக்கா, வெனிசூயேலாவை ஆக்கிரமிப்பதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
January 2, 2026, 7:00 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 26, 2025, 7:04 am
எதையும் செய்யாத பெண்ணா? - வெள்ளிச் சிந்தனை
December 25, 2025, 11:51 am
அது ஒரு பழைய மணி பர்ஸ் - கிறிஸ்துமஸ் சிந்தனை
December 12, 2025, 8:38 am
