நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு

புது டெல்லி:

இந்திய பட்ஜெட்டில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.17,250 கோடி அதிகமாகும்.

பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுப் பணிகளுக்காக  ரூ.990 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பூட்டானின் மேம்பாட்டுக்கு ரூ.2,400 கோடியும், மாலத்தீவுக்கு ரூ.400 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.200 கோடியும், இரானின் சாபார் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.100 கோடியும், நேபாளத்துக்கு ரூ.550 கோடியும், மோரீஷியஸுக்கு ரூ. 460 கோடியும், மியான்மருக்கு ரூ.400 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset