நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

விசாகப்பட்டினம்:

ஆந்திர தலைநகராக விசாகப்பட்டினம்  மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

ஆந்திரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதற்கான முன்னேற்பாடு கூட்டம் தில்லியில் நடைபெற்றறது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் மார்ச் 3, 4ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறது.

இதில் பெருநிறுவனங்கள் பங்கேற்று ஆந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

தற்போது ஆந்திர தலைநகராக அமராவதி உள்ள நிலையில், விரைவில் விசாகப்பட்டினம் தலைநகராக மாற்றப்படும். முதல்வர் அலுவலகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset