செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல்
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு நியூகாஸ்டல் அணியினர் முன்னேறியுள்ளனர்.
எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை சீன் லோங்ஸ்தாவ் அடித்தார்.
இரு ஆட்டங்களின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூகாஸ்டல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின் நியூகாஸ்டல் அணியினர் இந்த இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 8:34 am
ஹரிமாவ் மலாயாவின் செயல் திறனை ஃபிஃபா தலைவர் பாராட்டினார்
September 27, 2026, 8:30 am
ஐரோப்பிய தேசிய லீக்: கிண்ணம் ஸ்பெயின் வெற்றி
September 26, 2026, 11:01 am
ரோபர்டோ கார்லோஸ் தனது 717 மில்லியன் ரிங்கிட் வருமானத்தில் 99 சதவீதத்தை இழந்தார்
September 26, 2026, 10:54 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றி
September 25, 2026, 10:32 am
மெஸ்ஸி விடைபெற வாய்ப்பளிக்கும் ஸ்கலோனி
September 25, 2026, 10:29 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
September 24, 2026, 9:50 am
1000 கோல்களை இலக்காக கொண்டுள்ள ரொனால்டோவுக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை
September 24, 2026, 9:46 am
ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்திற்கு குறிவைக்கும் ஷாமலாராணி
September 23, 2026, 3:57 pm
