நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பயிற்சி முகாமில் இருந்து எட்டு வீரர்கள் வெளியேறினர்

லண்டன்:

இங்கிலாந்து தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து எட்டு வீரர்கள் வெளியேறினர்.

உடற்தகுதி, காயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக எட்டு வீரர்கள் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினர்.

இதை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை வெம்ப்ளி மைதானத்தில் ஜப்பானுக்கு எதிராக நடைபெறவிருக்கும் நட்பு ஆட்டத்திற்கு முன்னதாக, இங்கிலாந்து நிர்வாகி தோமஸ் டுசெல் தனது அணியை மறுசீரமைக்கும் கடினமான சவாலை எதிர்கொள்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை உருகுவேயுடனான 1-1 என்ற கோல் கணக்கில் இங்க்லாந்து சமநிலை கண்டனது.

இதை தொடர்ந்து, ஒரு நாள் கழித்து, காயங்கள், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக பல வீரர்கள் வெளியேறியதாக கால்பந்து சங்கம் அறிவித்தது. 

இது, இந்த சர்வதேச பயிற்சி முகாமுக்காக டுசெல் தேர்ந்தெடுத்த 35 பேர் கொண்ட அணியைப் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset