நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி

நியூயார்க்:

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியினர்  வெற்றி பெற்றனர்.

ஜில்லெட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் பிரேசில் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.

இதில் பிரான்ஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, ஹூகோ எக்திக் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜியோர்ஜியா அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் இஸ்ரைல் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset