நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி

பாரிஸ்:

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

நோர்ட் வெஸ்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் கொலம்பியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியினர் 3-1 என்ற கோல் கொலம்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் அணிக்காக டேசெரே டோவ் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை மார்கஸ் துராம் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அர்மேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜியோர்ஜியா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லித்துனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset