
செய்திகள் உலகம்
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
பெய்ஜிங்:
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் மாநிலத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பயந்து அங்கிருந்து வெளியே ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள் சோதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
கடந்த 2008ஆம் ஆண்டு சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதும் இதில் சுமார் 90,000 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:31 pm
யூதக் குடியேற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது இஸ்ரேல்
March 22, 2023, 1:22 pm
கனடா பள்ளியில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திய மாணவன்
March 22, 2023, 10:31 am
ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது
March 22, 2023, 9:11 am
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி
March 22, 2023, 12:45 am
சோமாலியாவில் பஞ்சத்தால் 43,000 பேர் பலி: ஐ.நா அறிவிப்பு
March 21, 2023, 9:51 pm
அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
March 20, 2023, 7:37 pm
அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய வட கொரியா தயார்
March 20, 2023, 6:58 pm
தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு
March 20, 2023, 3:47 pm