நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பதிலடி  தாக்குதல்கள்: இஸ்ரேல் -பாலஸ்தீனத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்

ஜெருசலேம்:

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில், ஜெருசலேம் பகுதியில் அமைந்துள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் பாலஸ்தீன நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர்.

இதனால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஜெருசலேமின் சிட்டி ஆஃப் டேவிட் பகுதியிலுள்ள யூத வழிபாட்டுத் தலம் அருகே பாலஸ்தீன நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

- ஆர்யன்

இதில் 7 இளைஞர்கள் பலியாகினர்; 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பாலஸ்தீன நபரை இஸ்ரேலிய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரேலில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கம் முதலே பதற்றம் நிலவி வருகிறது.

இதுவரையில் 29 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியின்  ஜெனீன் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் வியாழக்கிழமை 9 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset