நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானில் நிலநடுக்கம்: 2 பேர் பலி - 70 பேர் படுகாயம்

ஈரான்: 

ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானின் கோய் நகரில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நேற்று இரவு 23.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் மாகாண தலைநகரான தப்ரிஸ் உட்பட பல நகரங்களிலும் இது உணரப்பட்டது.

ஈரானிய செய்தி நிறுவனம் தகவல் படி, இந்த நடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Magnitude 5.9 Earthquake Hits Iran-Turkey Border - Videos from The Weather  Channel

இந்த நிலநடுக்கத்தால் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலநடுக்கத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  தெரிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

- செய்திப்பிரிவு 

தொடர்புடைய செய்திகள்

+ - reset