
செய்திகள் இந்தியா
சிறுநீர் கழிப்பு விவகாரம்: 2-ஆவது சம்பவத்தை மறைத்த ஏர் இந்தியாவுக்கு அபராதம்
புதுடெல்லி:
ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2-ஆவது சம்பவமாகும்.
முன்னதாக, நவம்பர் 26-ஆம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பொது வெளியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு சிறுநீர்கழிப்பு சம்பவம் தொடர்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட பிறகே அது வெளிச்சத்துக்கு வந்தது.
அதுவரையில், இந்த விவகாரம் குறித்து புகாரளிக்காமல் ஏர் இந்தியா மறைக்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தெரிவிக்காமல் இருந்ததற்காக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm