நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது

ஜொகூர்பாரு:

ஜொகூரில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து ஜொகூரில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜொகூரின் குளுவாங், கோத்தாதிங்கி, சிகாமாட்டில் ஆகிய 3 மாநிலங்களில் இந்த வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ளது.

மதியம் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 பேராக இருந்தது. இரவு 8 மணிக்கு அந்த எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது உள்ளது.

469 குடும்பங்களை சேர்ந்த அவர்கள் 16 வெள்ள நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.

சிகாமட்டில் ஆக அதிகமாக 1,229 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இவர்கள் 345 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று ஜொகூர் மாநில அரசின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ அஸ்மின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset