நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிஜாப் தடை வழக்கை விசாரிக்க விரைவில் மூன்று நீதிபதிகள் அமர்வு

புது டெல்லி:

கர்நாடக அரசு விதித்த ஹிஜாப் தடை  உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.

ஏற்கெனவே 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்ததையடுத்து தற்போது 3 நீதிபதிகள் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா, 'ஹிஜாப் தடையால் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளை விட்டு மாணவிகள் சென்றதால் ஓராண்டு வீணாகிவிட்டது.

பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் கர்நாடகாவில் அரசு, தனியார் கல்லூரிகளில் செயல்முறைத் தேர்வு தொடங்க உள்ளதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஹிஜாப் தடை தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். விசாரணை தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset