
செய்திகள் உலகம்
இலங்கையில் மார்ச் 9-இல் உள்ளூராட்சி தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியால் 6 மாதங்களுக்கு இந்தத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு கையாண்டு வருவதற்கு மக்களிடம் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்த இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், தேர்தல் நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால் பொருளாதார நெருக்கடி நிலையை இது மேலும் மோசமாக்கும் என்று அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், மார்ச் 9-ஆம் தேதி உள்ளாட்சி கவுன்சில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2018-இல் நடைபெற்ற முந்தைய உள்ளாட்சி கவுன்சில் தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜனா பெரமுனா கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
இந்த உள்ளாட்சி கவுன்சில் தேர்தலை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm