
செய்திகள் வணிகம்
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு புதிய விதிமுறை ஒரு சுமை: டத்தோ ஸ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் ஒரு சுமை என்று மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் கூறினார்.
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கான முகவர்கள் முன்கூட்டியே உறுதி கடிங்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதே வேளையில் மாலுமிகளின் கடப்பிதழ், கடல் பயணப் புத்தகங்கள் ஆகியவற்றுக்கு சத்தியப் பிரமாண அதிகாரிகளின் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில குடிநுழைவு இலாகா புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் என்னை போன்ற கடற்சார் தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு மேலும் சுமையை தான் ஏற்ப்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.
கப்பல் துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே மாலுமிகளின் விவரங்களுக்கு எப்படி அனுமதி பெறுவது தான் என்னுடை கேள்வியாக உள்ளது.
இதுபோன்ற விதிமுறைகள் நடைமுறைக்கு ஏற்புடையதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 30 ஆண்டுகளாக இத் துறையில் நான் ஈடுப்பட்டு வருகிறேன். இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கியது இல்லை.
ஆகையால், இந்த விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட இலாகா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm