செய்திகள் மலேசியா
கொரொனா நிலவரம்: ஒட்டுமொத்த மலேசியா 5,293; சிலாங்கூர் 1,680
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,293 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,680 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இடத்தில் இன்றும் நெகிரி செம்பிலான் 693 பேருடன் பதிவு செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் சரவாக் இருக்கிறது. அங்கு 661 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கூட்டரசுப் பிரதேசம் - கோலாலம்பூர் 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜொகூரில் 627 பேரும் பேராக்கில் 205 பேரும் மலாக்காவில் 183 பேரும் கிளந்தானில் 167 பேரும் சபாவில் 163 பேரும் கெடாவில் 170 பேரும் லாபுவானில் 156 பேரும் பினாங்கில் 114 பேரும் பஹாங்கில் 77 பேரும் திரெங்கானுவில் 12 பேரும் புத்ராஜெயாவில் 4 பேரும் பெர்லிஸில் 2 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 221,706 பேர் ஆவர். முதல் தவணை போட்டு முடித்தவர்கள் 177,876 பேர். இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 48,830 பேர் ஆவர்.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
