நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பானங்களை வழங்குவதில் தாமதமானதால் உணவக ஊழியர் பாராங் கத்தியால் தாக்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா: 

கடந்த செவ்வாய்கிழமை, செராஸ் தாமன் சேகர் பெர்டானாவில் உள்ள  உணவகத்தின் ஊழியர் ஒருவர் ஆயுதம் ஏந்திய இருவரால் தாக்கப்பட்டனர். 

அந்த இரு ஆடவர்களும் தங்களுக்குத் தேவையான பானங்களைக் கேட்டுள்ளனர். அந்தப் பானங்கள் வருவதற்கு தாமதமாகியதால் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் சத்தம் போட்டு அவரைத் தக்கியிருக்கக் கூடும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டது எனக் காஜாங் போலீஸ் தலைவர் முஹம்மத் ஜெய்த் ஹசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சம்பவதன்று காலை 9.25 மணிக்கு போலீஸுக்குக் கிடைக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 46 வயது ஆணின் இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு மற்றும் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

இது சம்பந்தமாக, ஜனவரி 18 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் காஜாங்கின் தாமன் சேரஸ் பெர்மாட்டாவில் 44 மற்றும் 47 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவத்தின் போது சந்தேக நபர் பயன்படுத்திய இரண்டு கத்திகள், துணிகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் ஜனவரி 22 வரை ஐந்து நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆயுதத்தைப் பயன்படுத்தி பலத்த காயம் ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 326ன் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

- அஷ்வினி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset