செய்திகள் மலேசியா
அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை அம்னோ விலக்கிக்கொள்ள வேண்டும்
கோலாலம்பூர்:
நாடாளுமன்றக் கூட்டம் உடனடியாக கூட்டப்படவில்லை எனில் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்துக்கு அளித்து வரும் ஆதரவை அம்னோ விலக்கிக்கொள்ள வேண்டும் என அக் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினரான முஹம்மது புவாத் ஸர்கஷி Mohd Puad Zarkashi வலியுறுத்தி உள்ளார்.
அரசாங்கம் தாமதிக்கும் பட்சத்தில் கூட்டணி அரசில் இருந்து வெளியேற அம்னோவுக்கு இப்போது வலுவான காரணம் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
"நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்படவில்லை எனில் பெரிக்கத்தான் நேசனல் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான குறிப்பிட்ட தேதியை அம்னோ அறிவிக்க வேண்டும்.
"இதே காரணத்துக்காக அரசுக்கு எதிராக அம்னோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்திய இளைஞரணியை ஆதரிக்கிறேன். ஏனெனில் நாடாளுமன்றம் இயன்ற விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
"எனவே, நடப்பு அரசாங்கத்துக்கு அளித்துவரும் ஆதரவை எந்த தேதியில் இருந்து திரும்பப் பெறப் போகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நடவடிக்கையை அம்னோ உச்ச மன்றம் விரைவுபடுத்த வேண்டும்.
"பெரிக்கத்தான் அரசாங்கம் நாட்டை ஆள்வதற்கு அம்னோ கடந்த ஓராண்டாக வாய்ப்பு வழங்கியுள்ளது. எனினும், இதற்கும் மேல் அரசாங்கத்தின் தோல்வி மற்றும் பிரதமரின் பிடிவாதத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தில் அம்னோ சிக்கிக்கொள்ளக் கூடாது," என்று Mohd Puad Zarkashi மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் அஷ்ரஃப் வாஜிதி டுசுகி Asyraf Wajdi Dusuki மாமன்னரின் அறிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக நாடாளுமன்றம் கூடுவது குறித்து, அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
