நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படும்

டாவோஸ்: 

நடப்பாண்டில் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி நிலையில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

விலைவாசி உயர்வு, குறைந்த அளவிலான வளர்ச்சி, கூடுதல் கடன், அதிகளவிலான சுற்றுச்சூழல் மாறுபாடு ஆகியவற்றினால் முதலீடுகள் மந்தமடைந்துள்ளதால் உலக பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக பொருளாதார அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

உலக சந்தையில் செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முதலீட்டாளர்கள் எடுத்து வருவதால், நடப்பாண்டில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

இது ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை மோசமாக அல்லது மிக மோசமாகவும், அமெரிக்காவில் 91% வரை மோசமாக அல்லது மிக மோசமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதே நேரம், சீனா போன்ற நாடுகளுக்கான உற்பத்தி விநியோகத்தைப் பன்முகப்படுத்தினால் இந்தியா, வங்காளதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பயனடைய வாய்ப்புள்ளதாக உலகப் பொருளாதார அமைப்பின் மூத்த பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

- செய்திப் பிரிவு

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset