நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

கல்வெட்டுகளில் கார்த்திகை தீபம் - சிறப்புக் கட்டுரை

கார்த்திகைத் தீபம்  என்றாலே நமக்கு திருவண்ணாமலை தான் நினைவுக்கு வரும் .அங்கு தீபம் ஏற்றியதும் தமிழர்களின் பெரும்பாலோர் வீடுகளிலும் சுடர் தீபங்கள் அகல்விளக்கில் வரிசைக்கட்டும் .

திருவண்ணாமலை தீபத்திற்கு வரலாற்று ஆதாரம் உண்டா எனத்தேடினால் திருவண்ணாமலையில் கிடைக்கும்  கல்வெட்டு  கி.பி 1031-ல் திருக்கார்த்திகைத் திருநாளன்று முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் திருவண்ணாமலைக் கோயில் ஸ்ரீ விமானத்தைச் சூழ இரவை சந்தி விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.

அதாவது, கருவறை முதல் மேலே உள்ள சிகரம் வரை உள்ள கட்டடப்பகுதியே ஸ்ரீ விமானம் என்று கூறப்படும்.

இவ்வாறு உயர்ந்த விமானத்தில், நெருக்கமாக சூழ்ந்து எரிந்த சந்திவிளக்குகளின் தீபங்களே அக்னி லிங்கமாக காட்சியளித்திருக்கும்.

இந்த சந்தி விளக்குகளுக்கு அணுக்க விளக்காக ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்குஎரிந்தது  மலையின் மேலா  என்று உறுதிபடத் தெரியவில்லை 

அதே மன்னன் காலத்தில் எட்டு வருடங்களுக்குப் பின்னர் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டிலும் கார்த்திகைத் திருவிழா பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இந்த இருகல்வெட்டுக்களுமே வருகைதரும் சிவனடியார்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த செய்தியையும் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையார் கோவிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு (கி.பி. 1031) கார்த்திகைத் திருநாளில் இறைவன் திருவேட்டைக்கு எழுந்தருளுவதைப் பற்றிக்கூறுகிறது.

திருவண்ணாமலை உடையார் திருக்கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளி இருந்தால் பெந்திருவவமிர்தமெய்து செய்தருளவும் அடியார்க்குச் சட்டிச்சோறு பிரசாதஞ்செய்தருளவும் குடுத்த பொன் ஏழு கழஞ்சில்' என்று அந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.

இதைத்  தொடர்ந்து  கிடைத்திருக்கும் கல்வெட்டுகள்  மூலம் முதலாம் குலோத்துங்க சோழன்வரை கூட  தொடர்ந்து கார்த்திகைத் திருவிழாவினை நடத்தி வந்தான் என்று தெரிகிறது.

அவனது முப்பத்தியிரண்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு, முப்பத்தியிரண்டாவது திருக்கார்த்திகைத் திருநாள் எனக் குறிப்பிடப்படுவது கொண்டு அறிந்து கொள்ளலாம். 

சோழன் மன்னர்கள் தொடர்ந்து  திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழாவை வருடந்தோறும் சிறப்புடன் நடத்தி வந்தனர் என்பது தெரிகிறது 

பிறகுவந்த விஜயநகர மன்னர்களும்  நாயக்க மன்னர்களும் விழாவினைச் சிறப்பாக நடத்திருக்கின்றனர் 

அதுவே இன்றுவரைத்தொடர்கிறது தமிழர்கள் மரபுகளைத்தொடர்ந்து கடைப்பிடித்து வருவதும் தெரிகிறது அனைவர்க்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள். வாழிய நலன்

- அண்ணாமலை சுகுமாரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset