நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணை அமைச்சர்கள் நியமனம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: ரபிஸி ரம்லி

கோலாலம்பூர்:

துணை அமைச்சர்கள் நியமனம் குறித்து அரசாங்கம் இந்த வாரத்தில் முடிவு செய்யப்படும் எனப் பொருளாதார  அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

துணை அமைச்சர்கள் ஓரிரு வாரங்களில் பதவி ஏற்று செய்து கொள்வார்கள் என்று கூறிய ரஃபிஸி, நேற்று அமைச்சரவையில் இது குறித்து சுருக்கமாக விவாதித்ததாகவும் இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அமைச்சரவை நியமனம் போன்றதொரு செயல்முறையாக இது இருக்கும் என்றும், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை அவர்கள் வைத்திருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும் என்றும் அவர் கூறினார்.

கட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட வேட்பாளர்களைப் பிரதமர் பரிசீலனைச் செய்த பின் முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset