நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காட்டு யானை மிதித்து ஒராங் அஸ்லி பெண் மரணம்

லிபிஸ்: 

கோலா லிபிஸ் அருகே உள்ள கம்போங் சிமோய் பாருவில் போஸ் பெட்டாவ் என்ற இடத்தில் காட்டு யானை மிதித்ததில் பூர்வக்குடி பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், வாக் அங்கட் யோக் டோங் (39) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரப்பர் தோட்டத்திற்கு அருகே மூங்கில் சுவர்கள் கொண்ட ஒரு மர வீட்டில் பாதிக்கப்பட்டவருடன் அவரது எட்டு குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முஹம்மத் நூர் கூறினார். 

யானைக் கூட்டம் அம் மர வீட்டை தாக்கிய போது அதிலிருந்த அனைவரும் பயத்தில் ஓடிவிட்டனர். இருப்பினும், அப்பெண் யானைகளால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset