நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றுக்கு 1,576 பேர் பாதிப்பு; மூன்று பேர் மரணம்: சுகாதாரத் துறை

கோலாலம்பூர்:

நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,001,908 ஆக உயர்ந்துள்ளது.

சிலாங்கூரில் 637, கெடாவில் 146, சபாவில் 100, மலாக்காவில் 99, கோலாலம்பூரில் 99, கிளந்தானில் 96, பினாங்கில் 82, சரவாக்கில் 79, பேராக்கில் 51, ஜொகூரில் 40, திரெங்கானுவில் 39, நெகிரி செம்பிலானில் 37, பகாங்கில் 29, புத்ராஜெயாவில் 29, லாபுவனில் 7, பெர்லிசில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு மூன்று பேர் இறந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 36,716 ஆக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,504 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

98 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.

சிலாங்கூரில் 97, சபாவில் 76, ஜொகூரில் 38 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset