நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜனவரி 1 முதல் கே.எல்.ஐ.ஏ புறப்பாடு வாயில்களில் பாதுகாப்பு சோதனை இனி இருக்கும்: போக்குவரத்து அமைச்சகம்

சிப்பாங்:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-இல், ஜனவரி 1-ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள், புறப்படும் வாயில்களில் (Departure Gates) பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்து அமைச்சகம், குடியேற்றச் சோதனைப் பகுதியின் பின்னர் (Post-Immigration Area) மேற்கொள்ளப்பட்டு வந்த பாதுகாப்பு சோதனைகளை புறப்படும் வாயில்களுக்கு மாற்றுவதன் மூலம், பயணிகள் ஏறும் முன் அவர்களின் நகர்வுகள் மேலும் சீராக அமையும் என தெரிவித்துள்ளது.

தற்போதைய அமைப்பு பயண நேரங்களில் நெரிசலை ஏற்படுத்தி வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த மாற்றம் மலேசியா விமான நிலைய  ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Malaysia Airports Holdings Bhd), சுங்கத் துறை, மலேசிய எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (Malaysian Border Control and Protection Agency) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், இந்த புதிய நடைமுறை பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 1-இல் சிறந்த சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மேலும் திறம்பட செயல்பட உதவும் என்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset