நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தவறுகளில் இருந்து தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொள்கிறது: ஸாஹித்

கூலிம்:

தவறுகளில் இருந்து தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொள்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

30 தொகுதிகளில் மட்டுமே அக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.

இதனால் நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைய தேசிய முன்னணி உறுதுணையாக இருந்தது.

இருந்த போதிலும் தேர்தலில் கண்ட தோல்விக்கு பல தவறுகள் காரணமாக உள்ளன.

அந்தத் தவறுகளில் இருந்து தேசிய முன்னணியும் அம்னோவும் பாடம் கற்றுக் கொண்டு வருகிறது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியிடம் நிறைய பணம் இருந்தது.
ஆனால் அனைத்திற்கும் பணம் மட்டுமே காரணமாக அமைந்து விடாது.

இதனால் அத் தேர்தலில் கிட்டத்தட்ட 61 ஆண்டுகளுக்கு பின் தேசிய முன்னணி தோல்வி கண்டது என்று பாடாங் செராயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸாஹித் ஹமிடி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset