நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதாரத்தை வலுப்படுத்த அன்வாரின் அனுபவம் தேவை: நிக் நஸ்மி

கோலாலம்பூர்: 

இயற்கை வளம், சுற்று சூழல் & பருவநிலை மாற்ற அமைச்சர்  நிக் நஸ்மி நிக் அஹ்மத், நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அன்வார் இப்ராஹிமின் முடிவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

1990-ஆம் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மதின் நிர்வாகத்தின் போது நிதி அமைச்சராக அன்வாரின் அனுபவம் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தேவை என்று நிக் நஸ்மி கூறினார்.

அன்வார் போன்ற ஒருவர் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்துவது மிகவும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்" என செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இன்று ஷா ஆலமில் உள்ள விஸ்மா ஷா ஆலம் சிட்டி கவுன்சிலில் நடைப்பெற்ற சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தன்னுடைய  ஒரு முற்போக்கான அரசியல் பயணம்' என்ற புத்தகத்தை வெளியிட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

நிக் நஸ்மியின் வாழ்க்கை வரலாறு, மலேசிய அரசியலில் அவரது பிரதிபலிப்புகள் பற்றிய புத்தகத்தை முன்னாள் கல்வி அமைச்சர்  மஸ்லீ மாலிக் வெளியிட்டார்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset