செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
ஜகர்த்தா:
இந்தோனேசியாவின் ஜாவா மாநிலத்தில் உள்ள ஆக உயரமான செமெரு (Semeru) எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
அந்நாட்டு எரிமலை குறித்த விழிப்புநிலையை அதிகாரிகள் உச்சத்துக்கு உயர்த்தியுள்ளனர்.
எரிமலை சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலையும் புகையையும் கக்கியதை அடுத்து, அண்டை கிராமங்களில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
எரிமலை பகுதியிலிருந்து குறைந்தது 8 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் யாரும் செல்லவேண்டாம் என்று குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஜப்பானில் சுனாமி ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.
ஆக்கினாவா (Okinawa) பகுதியில் உள்ள மியாக்கோ (Miyako), யேயாமா (Yaeyama) தீவுகளில் சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் Kyodo செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டிறுதியில், செமெரு எரிமலை வெடித்தபோது, குறைந்தது 51 பேர் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-AFP
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
