நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரேசிலை வீழ்த்தியும் பலனில்லை: உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது கேமரூன்

டோஹா:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரேசில் அணி தோல்வி கண்டது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண  கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவில்  நடைபெற்றது. இதில் பிரேசில், கேமரூன் அணிகள் மோதின. 

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தது. 

இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் கேமரூன் வீரர் வின்சென்ட் அபுபெக்கர் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 

இறுதியில், கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. பிரேசில் அணி தோல்வி அடைந்தாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset