
செய்திகள் இந்தியா
ஜம்மு காஷ்மீரில் புதிதாக 7.72 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் 7,72,872 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதில் மொத்த வாக்காளர்கள் 83,59,771 பேர். இவர்களில் 42,91,687 பேர் ஆண்கள், 40,67,900 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 184 பேர். மொத்த வாக்காளர்களில் மாற்றுத்திறனாளிகள் 57,253 பேர் ஆகும்.
ஜம்மு-காஷ்மீரில் புதியதாக 613 வாக்குச்சாவடி மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது இறுதி வாக்காளர் பட்டியலில் 7,72,872 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடாக கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 5:57 pm
பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு
February 2, 2023, 3:52 pm
10 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பில்லை: பட்ஜெட்டில் ஏமாற்றம்
February 2, 2023, 2:34 pm
2 ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர் சித்திக் காப்பான் விடுதலை
February 2, 2023, 1:08 pm
பான் கார்டு பொது அடையாள அட்டை
February 2, 2023, 12:59 am
ஏர் இந்தியாவில் சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன்
February 1, 2023, 11:19 pm
மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
February 1, 2023, 11:08 pm
வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக அதிகரிப்பு
February 1, 2023, 4:14 pm
ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
February 1, 2023, 4:06 pm