நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ.1000, 500 நோட்டுகள் வாபஸ் பெற்றது தவறான நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம்

புது டெல்லி:

இந்தியாவில் 2016இல் ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கியது முற்றிலும் தவறான முடிவு என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் முறையிட்டு வாதாடினார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ. நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபன்னா, வி.ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ப.சிதம்பரம்,

"ரிசர்வ் வங்கியால் மட்டுமே ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் உரிமை உள்ளது. மத்திய அரசால் தன்னிச்சையாக இதை செய்ய முடியாது.

பெரும் பொருளாதார முடிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராயவில்லை.

ரூ.2,300 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

ஆனால், அரசு அச்சகத்தால் மாதத்துக்கு ரூ.300 கோடி ரொக்கம் மட்டுமே அச்சடிக்க முடிந்தது.

ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க  2,15,000 ஏடிஎம்கள் மாற்றியமைக்க வேண்டியிருந்தது. இதை எல்லாம் மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை.

ரிசர்வ் வங்கியின் 2016-17 ஆண்டு அறிக்கையில் வெறும் ரூ.43 கோடிக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் குறிக்கோள் எப்படி நிறைவேறியதாகும்.

99.3 சதவீத மதிப்பிழப்பு பணம் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லுபடியாகும் பணமாக மாற்றப்பட்டுவிட்டது என்பது இந்த முழு நடவடிக்கையின் இறுதி முடிவாகும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தவறான முடிவு என நீதிமன்றம் உத்தரவிட்டால், வருங்காலத்தில் இதுபோன்ற தவறான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset