நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸாஹித் ஹமிதி தலைமைத்துவத்திற்கு 130 தொகுதிகள் ஆதரவு

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ ஸாஹித் ஹமிதி தலைமைத்துவத்திற்கு 130 அம்னோ தொகுதிகள் முழு ஆதரவைத் தந்துள்ளன.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 30 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கை கூட்டணி தலைவர் அன்வார் ஆட்சியமைக்கவும் ஸாஹித் ஆதரவு தெரிவித்தார்.

இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடு முழுவதிலுமுள்ள கிட்டத்தட்ட 130 அம்னோ தொகுதிகள் ஸாஹித் ஹமிதியின் தலைமைக்கு ஆதரவு தந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அவர் அம்னோ, தேசிய முன்னணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்றும் அத் தொகுதி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset