நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்கள் வெறுப்பை நிராகரித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும்: கிறிஸ்துமஸ் வாழ்த்தில் பிரதமர் அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர்:

மலேசியர்கள் பரஸ்பர நல்லிணக்கத்திற்காக வெறுப்பை நிராகரிக்கவும், ஒற்றுமையை வளர்க்கவும் தங்கள் உறுதியை வலுப்படுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் இதனை கூறினார்.

மலேசியாவின் வலிமை பன்முகத்தன்மையில் ஒற்றுமையில் உள்ளது. குறிப்பாக பல மத,  பல இன சமூகங்களிடையே ஒற்றுமை இதற்கு அடித்தளமாகும்.

நல்லிணக்கம் தற்செயலாக பிறக்கவில்லை.

நியாயமான கொள்கைகள், சம வாய்ப்புகள், மக்களிடையே பரஸ்பர புரிதல் கலாச்சாரம் மூலம் கட்டமைக்கப்படுகிறது என்று மடானி அரசாங்கம் நம்புகிறது.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மனிதாபிமான மோதல், சமூகப் பிரிவினையை எதிர்கொள்ளும் உலகில், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக ஒற்றுமை, உரையாடல், பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் பாதையை மலேசியா தேர்ந்தெடுத்துள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிக்க இடம் கொடுக்கப்படும்போது உண்மையான ஒற்றுமை வெளிப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset