நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது: மொஹைதீன்

கோலாலம்பூர்:

தேசிய கூட்டணி ஆட்சியமைக்க 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின் உறுதியாக கூறுகிறார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இருந்த போதிலும் தமக்கு தான் நாட்டில் ஆட்சியமைக்க போதுமான ஆதரவு உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மொஹைதீன் கூறியுள்ளார்.

நம்பிக்கை கூட்டணிக்கான ஆதரவுக் கடிதங்கள் என்னிடம் உள்ளது. இதை ஏற்கெனவே மேலவைத் தலைவர் மூலம் அரண்மனையில் சமர்ப்பித்துள்ளேன்.

அதே போன்று பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் அன்வார் தனது பெரும்பானமையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று மொஹைதீன் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset