நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 10 ஆவது  பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்: பேரரசர் முடிவு 

கோலாலம்பூர்: 

நாட்டின் 10 ஆவது  பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்படுவதாக அரண்மனையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மலேசியாவின் 10ஆவது பிரதமராக  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 5.00 மணி அளவில் பதவியேற்கிறார்.

மாமன்னர் ஆட்சியாளர்களை சந்தித்த பிறகு அன்வரை பிரதமராக நியமிக்க முடிவு செய்தார் என்று  இஸ்தானா நெகாராவின்  மேற்பார்வையாளர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபாதில் ஷம்சுடின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset