
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 3,537 பேர் பாதிப்பு; 8 பேர் பலி: சுகாதாரத்துறை
புத்ராஜெயா:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,975,473 ஆக அதிகரித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 1,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 290, சபாவில் 254, சரவாக்கில் 220, மலாக்காவில் 205, கிளந்தானில் 202, கெடாவில் 200, பினாங்கில் 180, பேராக்கில் 145, பகாங்கில் 135, நெகிரி செம்பிலானில் 114, புத்ராஜெயாவில் 107, திரெங்கானுவில் 103, ஜொகூரில் 58, லாபுவானில் 35, பெர்லிசில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,978 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 101 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூரில் 200, சபாவில் 115, ஜொகூரில் 71 பேரும் சிகிச்சை பெறுகின்றனர் என்று சுகாதாரத்துறை கூறியது.
தொற்றுக்கு 8 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 8 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,628 ஆக அதிகரித்துள்ளது.
8 மரண சம்பவங்களில் ஒருவர் மருத்துவமனை சிகிச்சைக்கு முன்னதாகவே இறந்துள்ளார்.
இம்மாதம் மட்டும் இதுவரை 153 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
கடந்த மாதம் 101 பேரும் செப்டம்பரில் 158 பேரும் இறந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 2:24 pm
நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களில் இடி மின்னல், கடுமையான மழை: மெட் மலேசியா தகவல்
May 11, 2025, 11:51 am
அர்ப்பணிப்பின் உருவம் அம்மா: டத்தோஸ்ரீ சரவணன்
May 10, 2025, 1:22 pm