
செய்திகள் உலகம்
11 நிமிஷத்துக்கு ஒரு பெண் கொலை: ஐ.நா. கவலை
நியூயார்க்:
உலகில் ஒவ்வொரு 11 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் வரும் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவிக்கையில்,
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகின் மிகப் பரவலான மனித உரிமை மீறலாக மாறியுள்ளது. ஒவ்வொரு 11 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்படுகிறார்.
கரோனா பாதிப்பு முதல் பொருளாதார சரிவு வரையிலான தாக்கங்கள், தவிர்க்கமுடியாத வன்முறைகளையும், வாக்குவாதங்களையும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
இதில் பெண்கள் மற்றும் சிறுமிகள் வெறுப்பு பேச்சு, பாலியல் ரீதியில் மற்றும் இணையவழியில் என பலவகை துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.
பெண்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரம், சமமான பொருளாதார மீட்சி, உலகின் தேவையான நீடித்த வளர்ச்சி ஆகியவற்றையும் இந்த வன்முறைகளும், பாகுபாடும் தடுக்கின்றன.
இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நேரமிது. அதாவது, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அரசுகள் சிறந்த திட்டங்களை வடிவமைத்து, நிதி ஒதுக்கி, தேசிய அளவிலான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm