
செய்திகள் விளையாட்டு
MU உடனான பயணம் முடிவுக்கு வந்தது: அணியில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகம் குறித்து மனம் திறந்தார் ரொனால்டோ
தோஹா:
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான அவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021-இல் இரண்டு ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது MU.
ஆனால், நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான போட்டிகளில் ரொனால்டோ ஆடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. முக்கியமாக அந்த அணியின் பயிற்சியாளர்தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
அதுதொடர்பாக பேட்டியளித்த ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியின் தனக்கு செய்யப்பட்ட துரோகம் மற்றும் ரூனி குறித்தும் வெளிப்படையாக இப்படி பேசினார்.
“அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம். நான் அவரை விட சிறந்தவன் என இங்கு சொல்லவில்லை” இவ்வாறு தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது.
கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கானா அணிக்கு எதிரான போர்ச்சுகலின் தொடக்க ஆட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரொனால்டோவின் மான்செஸ்டர் உடனான பயணம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 7:00 pm
E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm