நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரியல்மாட்ரிட் அணியில் பயிற்சியை தொடங்கினார் ரொனால்டோ ஜூனியர்

மாட்ரிட்:

தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ரியல்மாட்ரிட் அணியில் பயிற்சியை ரொனால்டோ ஜூனியர் தொடங்கினார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர், ரியல்மாட்ரிட் அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, அவரது பெயர் மீண்டும் ரியல்மாட்ரிட் அணியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

ரொனால்டோவின் மூத்த மகன், எதிர்காலத்தில் அந்த அணிக்கு மாறும் சாத்தியத்திற்குத் தயாராகும் வகையில், கடந்த செவ்வாயன்று ரியல் மாட்ரிட்டின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியுடன் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

ரொனால்டோ சந்தியாகோ பார்னபவ் அரங்கில்  ஒன்பது சீசன்களில் 438 போட்டிகளில் 450 கோல்கள் அடித்து, ரியல்மாட்ரிட் அணியின் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக உள்ளார்.

அவர் அந்த அணியின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மேலும் அந்த அணியில் இருந்த காலத்தில் 13 முக்கிய கிண்ணங்களையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் ரொனால்டோ ஜூனியர் ரியல்மாட்ரிட் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset