நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 268பேர் பலி

சியாஞ்சூர்: 

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 268 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்தோனேசியா ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது.

பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சியாஞ்சூர், தொலைதூரப் பிரதேசமாகும் என்பதால் உண்மையான சேத நிலவரத்தைத் தெரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினரும் ராணுவத்தினரும் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சேத விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

நிலநடுக்கத்துக்கு தற்போதுவரையில் பலியானோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவருகின்றன.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சியாஞ்சூர் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகள் இடையே சிக்கியிருக்கக் கூடியவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பல வீடுகளில் கான்கிரீட் மற்றும் கூரை தகடுகள் படுக்கை அறைகளுக்குள் நொறுங்கி விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிக அதிகமாக உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 25 பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இந்தோனேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

தொடர்புடைய செய்திகள்

+ - reset