நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜாவா தீவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேற்கு ஜாவா மாநிலத்தில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. 

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.

இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுவருகின்றன. மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இடிந்து விழுந்த செங்கல் வீடுகளில் புதையுண்டவர்களைத் தேடினர். பல வீடுகளில், படுக்கையறைகளுக்குள் கான்கிரீட் மற்றும் கூரை ஓடுகள் விழுந்து கிடந்தன. 

நேரம் செல்லச்செல்ல மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இன்று இரவு நிலவரப்படி உயிரிழப்பு 62 ஆக உயர்ந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset